தேசிய செய்திகள்

அரசு பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ கஞ்சா பறிமுதல்

பங்காருபேட்டையில் அரசு பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஒடிசாவை சேர்ந்தவரை போலீசா கைது செய்துள்ளனா.

தினத்தந்தி

பங்காருபேட்டை

கோலா மாவட்டம் பங்காருபேட்டை பஸ் நிலையத்தில் ஒருவர் கஞ்சாவுடன் நின்று கொண்டிருப்பதாகவும், அவர் கஞ்சாவை பஸ்சில் கடத்தி செல்ல முயற்சி செய்வதாகவும் கலால் துறை இன்ஸ்பெக்டர் அருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கலால் துறை அதிகாரிகள், பங்காருபேட்டை போலீசார் உதவியுடன் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்தப்பகுதியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

மேலும், கயில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தை சேர்ந்த பிசின்மாஜி என்பது தெரியவந்தது.

மேலும் அவர் அரசு பஸ்சில் கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ 145 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு