டேராடூன்,
பிர்புர் பகுதியில் ராம்சா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த மிகவும் பழமையான பாலத்தில் இன்று காலை மினி டிராக்டரும், மோட்டார் பைக்கும் சென்ற போது விபத்து நேரிட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட அந்த பாலம் காலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புது பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.