தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சாவு, ராணுவ வீரர் வீரமரணம்

காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரின் காசிகாண்ட் பகுதியில் பாதுகாப்பு படையின் வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். ஸ்ரீநகரை நோக்கி சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் தொடங்கியது. அப்பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து இருதரப்பு இடையேயும் மோதல் வெடித்தது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் ஆப்ரேஷன் தொடர்கிறது என கடைசியாக கிடைக்க பெற்ற தகவல்கள் தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்