தேசிய செய்திகள்

துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் சாவு

சிவமொக்காவில் துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

தினத்தந்தி

சிவமொக்கா-

சிவமொக்காவில் துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சுற்றுலா சென்றனர்

பெங்களூரு மாகடி ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). இவரது நண்பர் சஞ்சய் (25). இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2 பேரும் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வது வழக்கம். இந்தநிலையில், சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி அவர்கள் நண்பர்களுடன் சிவமொக்காவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 9-ந்தேதி கவுதம், சஞ்சய் மற்றும் நெலமங்களா அருகே உள்ள லக்கனஹள்ளியை கிரீஷ் ஆகிய 3 பேரும் காரில் சிவமொக்காவுக்கு காரில் சென்றனர். அவர்கள் பீமனகட்டே தொங்கும் பாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டு கம்மரடியில் உள்ள விடுதியில் தங்கினர்.

ஆற்றில் மூழ்கினர்

பின்னர் மறுநாள் அவர்கள் 3 பேரும் தீர்த்தஹள்ளி தாலுகா பீமனகட்டே கிராமத்தில் ஓடும் துங்கா ஆற்றுக்கு குளிக்க சன்றனர். அங்கு அவர்கள், 3 பேரும் ஆற்றில் ஜாலியாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது கவுதம் ஆழமான பகுதிக்கு சென்றதாக தொகிறது. இதனால் அவர், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சய், கவுதமை காப்பாற்ற சென்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கிரீஷ் காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கியதால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து கிரீஷ், தீர்த்தஹள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரப்பர் படகு மூலம் சஞ்சய், கவுதம் ஆகிய 2 பேரை தேடினர்.

பிணமாக மீட்பு

பின்னர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதையடுத்து 2 பேர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தீர்த்தஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து