தேசிய செய்திகள்

முதியவர் கொலையில் பேரன் உள்பட 2 பேர் கைது

முதியவர் கொலையில் பேரன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுளளனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு எலகங்கா 2-வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் புட்டய்யா (வயது 70). இவரை கடந்த 17-ந் தேதி மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து இருந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் புட்டய்யாவின் பேரனான மைசூருவை சேர்ந்த ஜெயந்த் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது சொத்து தகராறில் புட்டய்யாவை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஜெயந்த் ஒப்புக்கொண்டார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். ஜெயந்த் கொடுத்த தகவலின்பேரில் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது