பெங்களூரு,
கர்நாடக அரசின் போலீஸ் துறையில் பணி நியமனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காவலர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு நேரடியாக பணி நியமனம் வழங்கப்பட இருக்கிறது.
இந்த இட ஒதுக்கீடு வழங்கியதற்காக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு போலீஸ் அதிகாரி அலோக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இறுதியில் போலீஸ் பணி நியமனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இனி தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.