தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம்

சத்தீஷ்காரில் கண்ணி வெடியில் சிக்கிய 2 பாதுகாப்புப்படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜாபூர் மாவட்டம், கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இட்வார் கிராமத்தில் உள்ள காட்டில் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மண்ணுக்கு அடியில் நக்சலைட்டுகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் ஷிவ்லால் மாண்டவி மற்றும் மித்லேஷ் மார்க்கம் ஆகிய 2 பாதுகாப்புப்படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, உடனிருந்த வீரர்கள் காயமடைந்த அந்த வீரர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் மேலும் சில கண்ணி வெடிகள் புதைத்து வைத்திருக்கலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்