தேசிய செய்திகள்

4 ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் சுற்றிவளைப்பு

ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் நேற்று மாலை சுற்றிவளைத்தனர்.

தினத்தந்தி

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. இந்த தேடுதல் வேட்டை நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.

இந்த நிலையில் ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் நேற்று மாலை சுற்றிவளைத்தனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்