திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு "மாடலிங்” துறைக்கு செல்ல ஆசை இருந்துள்ளது. அந்த இளம்பெண்ணுக்கு சிந்து, அலினா என்ற 2 பெண்கள் அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் "மாடலிங்" துறையில் சாதிக்க வைப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் இரு பெண்களும், அந்த இளம்பெண்ணை பாலியல் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த இளம்பெண், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். மேலும் போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
இதையடுத்து அந்த இளம்பெண் பாலியல் கும்பலின் பிடியிருந்து தப்பி கேரளாவுக்கு வந்துவிட்டார். "மாடலிங்" ஆசை காண்பித்து துபாய்க்கு அழைத்துச் சென்று தன்னை பாலியல் கும்பலின் பிடியில் சிக்க வைத்து சீரழித்த சிந்து மற்றும் அலினா மீது மரடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அவர் தனது புகாரில், துபாயில் தனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. போதை மருந்து கொடுத்து சீரழித்தது, பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து மிரட்டலுக்கு உள்ளானது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னைப் போன்று 'ஏராளமான இளம்பெண்கள் இங்கிருந்து அழைத்துச்செல்லப் பட்டிருப்பதாவும், கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் அந்த இளம்பெண் அதிர்ச்சி தகவலை தெரி வித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் கொச்சியில் இருந்த அலிலானை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மும்பையில் பதுங்கியிருந்த சிந்துவும் கைது செய்யப்பட்டார். அவர்களி டம் விசாரணை நடத்தியதில் 'இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்? என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.