தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம் : 20 ரயில்கள் தாமதம்

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், 20 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

புதுடெல்லி,

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகுவதில்லை. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதன் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் பனி மூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

இன்றும் பனிமூட்டம் கடுமையாக இருந்தது. டெல்லியில் இன்று விடிந்து வெகுநேரம் ஆகியும் கட்டிடங்கள், நீர்நிலைகள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் கடுமையாக இருந்தது. பனிமூட்டம் காரணமாக இன்று 20 ரெயில்கள் தாமதம் ஆகியுள்ளன. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்