தேசிய செய்திகள்

அரசு பங்களாவை காலி செய்யாத 200 முன்னாள் எம்.பி.க்கள்

அரசு பங்களாவை 200 முன்னாள் எம்.பி.க்கள் காலி செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் தங்களுக்கு 2014-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட பங்களாக்களை இன்னும் காலி செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த எம்.பி.க்களுக்கு டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மக்களவை கலைக்கப்பட்டு ஒரு மாதத்தில் அவர்கள் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதி.

16-வது மக்களவையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மே மாதம் 25-ந் தேதி கலைத்து உத்தரவிட்டார். எனவே, கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் எம்.பி.க்கள் 200 பேர் அரசு பங்களாக்களை காலி செய்யாததால் புதிய எம்.பி.க்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கித்தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடப்பு மக்களவையில் 260-க்கும் மேற்பட்டோர் புதிய எம்.பி.க்கள் ஆவர். அவர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்க பெரும் செலவாகும் என்பதால், வெஸ்டர்ன் கோர்ட் பகுதியில் உள்ள தற்காலிக தங்கும் இடங்களிலும், விருந்தினர் மாளிகைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு