40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் காங்கிரஸ், லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் 11 தொகுதியை கேட்டது. ஆனால் 8 தொகுதிகள்தான் என லாலு கட்சி கூறியது. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றால் தனியாக போட்டியிடுங்கள் என ராஷ்டீரிய ஜனதா தளம் கூறிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 9 தொகுதிகள் வழங்கப்படுகிறது. பா.ஜனதா கூட்டணியிலிருந்து பிரிந்த உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டீரிய லோக் சாம்தா கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. பிற உதிரி கட்சிகளுக்கு மீதம் உள்ள தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.