தேசிய செய்திகள்

அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய அரசு

அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 31.51 கோடி 1,800 தடுப்பூசிகளை இலவசமாக வினியோகம் செய்துள்ளது.

மாநிலங்களிடம் தற்போது 1.15 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு