தரம்சாலா,
இமாச்சலப்பிரதேசம் தரம்சாலாவில் உள்ள அரசு முதுநிலை கல்லூரியில் உள்ள விடுதியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு விடுதியில் உள்ள மெஸ்ஸில் சாப்பிட்ட பிறகு ஒரு சில மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் 21 மாணவிகளுக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹாஸ்டல் வார்டன் கனிகா தரம்சாலா பகுதியில் உள்ள மருத்துவமனையில் மாணவிகளை சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர் விடுதி மெஸ்ஸில் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் புட் பாய்சன் (Food Poison) ஆனதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மாணவிகளின் உடல்நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் மருத்துவமனை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்படி விசாரணை நடத்த உள்ளனர்.