தேசிய செய்திகள்

"1274 டேங்கர்களில் 21,392 மெ. டன் ஆக்சிஜன் மாநிலங்களுக்கு வினியோகம்" - இந்திய ரயில்வே தகவல்

1274 டேங்கர்களில் 21,392 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்று இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ரயில்வே பல மாநிலங்களுக்கு இதுவரை 1274க்கும் மேற்பட்ட டேங்கர்களில் 21,392 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது.

தற்போதுவரை மராட்டியத்திற்கு 614, உத்தரப்பிரதேசத்துக்கு 3797, மத்தியப் பிரதேசத்துக்கு 656, டெல்லிக்கு 5476, அரியாணாவுக்கு 2023, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 2115, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழகத்துக்கு 1808, ஆந்திராவுக்கு 1738, பஞ்சாப்புக்கு 225, கேரளாவுக்கு 380, தெலங்கானாவுக்கு 1858, ஜார்கண்ட்டுக்கு, 38, அசாமுக்கு 240 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிகப்பட்டுள்ளன.

இதுவரை 313 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. தற்போது 5 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 23 டேங்கர்களில் 406 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் சென்று கொண்டிருக்கின்றன. இன்று இரவு இன்னும் பல ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு