தேசிய செய்திகள்

சென்னை அதிகாரி உள்பட 22 வருமானவரி அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை அதிகாரி உள்பட 22 வருமானவரி அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், நேர்மையாக வருமான வரி செலுத்துவோரை சில கருப்பு ஆடுகள் போன்ற சில அதிகாரிகள் தங்கள் அதிகாரம் மூலமாக தவறாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தவறு செய்த அதிகாரிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து சமீபகாலமாக அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் 27 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு கட்டாய ஓய்வில் அனுப்பியது. இந்த நிலையில் தற்போது வருமான வரித்துறையில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கிய சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள சென்னை அதிகாரி உள்பட மேலும் 22 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில் மும்பை, பெங்களூரு உள்பட 12 மண்டலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு