தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 22 ஆயிரம் பேருக்கு தொற்று; கொரோனா பாதிப்பு குறைகிறது; கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: மந்திரி விஜய் வடேடிவார்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறையும் மாவட்டங்களில் கட்டுப் பாடுகள் தளர்த்தப்படும் என்று மந்திரி விஜய் வடேடிவார் கூறினார்.

தினத்தந்தி

மராட்டியத்தில் நேற்று புதிதாக 22 ஆயிரத்து 122 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறையும் பாதிப்பு

மராட்டியத்தை தாக்கிய 2-வது கொரோனா அலையால் கடந்த மாதம் நோய் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தினந்தோறு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியது. இதன் காரணமாக தீவிர நோய் பாதித்தவர்களுக்கே ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதேபோல ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தநிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் கடந்த மாதம் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக இந்த மாதம் தொடக்கம் முதல் மாநிலத்தில் நோய் பாதிப்பு குறைய தொடங்கியது.

22,122 பேர்

இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 22 ஆயிரத்து 122 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் 42 ஆயிரத்து 320 பேர் குணமாகினர். கடந்த 2 வாரங்களாக மாநிலத்தில் நோய் பாதித்தவர்களை விட, குணமானவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் வேகமாக குறைந்து வருகின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 27

ஆயிரத்து 580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேபோல இதுவரை 56 லட்சத்து 2 ஆயிரத்து 19 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 51 லட்சத்து 82 ஆயிரத்து 592 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது நோய் பாதித்தவர்களில் 92.51 சதவீதம் பேர் குணமாகி இருக்கின்றனர்.

361 பேர் பலி

மாநிலத்தில் நேற்று பலி எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. புதிதாக 361 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு 89 ஆயிரத்து 212 பேர் உயிரிழந்து உள்ளனர்.மாநிலத்தில் இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 77 ஆயிரத்து 290 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 16.83 சதவீதம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதித்தவர்களில் 1.59 விகிதம் பேர் பலியாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 27 லட்சத்து 29 ஆயிரத்து 301 பேர் வீடுகளிலும், 24 ஆயிரத்து 932 பேர் தனிமை மையங்களிலும்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பை பாதிப்பு

தலைநகர் மும்பையிலும் நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று சோதனை செய்யப்பட்ட 21 ஆயிரத்து 947 பேரில் 1,057 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோல மேலும் 48 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள்.நகரில் இதுவரை 6 லட்சத்து 98 ஆயிரத்து 867 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 14 ஆயிரத்து 671 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 334 நாட்களாக உள்ளது. 44 கட்டுபாட்டு மண்டலங்கள் உள்ளன. 208 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மந்திரி பேட்டி

இதற்கிடையே மராட்டிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஜய் வடேடிவார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில் மொத்தம் 36 மாவட்டங்களில் 15 மாவட்டங்களான புல்தானா, கோலாப்பூர், ரத்னகிரி, சாங்கிலி, யவத்மால், அமராவதி, சிந்துதுர்க், சோலாப்பூர், அகோலா, சத்தாரா, வாசிம், பீட், கட்சிரோலி, அகமத்நகர், உஸ்மனாபாத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறியப்படுகிறது.

தளர்த்தப்படும்

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மற்ற மாவட்டங்களில் வருகிற 1-ந் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக இன்னும் நான்கைந்து நாட்களுக்கு நிலைமைய கண்காணித்து முடிவு எடுக்கப்படும். மும்பையில் அடுத்த 15 நாட்களுக்கு மின்சார ரெயிலில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மின்சார ரெயிலில் பொதுமக்களை அனுமதித்தால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்