தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 220.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய அரசு தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 95.17 கோடி 2-வது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதே சமௌஅம் இந்தியாவில் தற்போது 1,842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், இதுவரை மொத்தம் 4,41,50,057 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்