தேசிய செய்திகள்

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 23 பேர் கைது

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்காளதேசத்தை சேர்ந்த 23 பேரை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கைது செய்தனர்.

தினத்தந்தி

அகர்தலா,

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக சிலர் அத்துமீறி வருவதாக எல்லை பாதுகாப்பு படைக்கு துப்பு கிடைத்தது. இதனையடுத்து திரிபுரா ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது சென்னை வரவிருந்த ரெயிலில் சந்தேகத்தை கிளப்பும் வகையில் சிலர் பயணிக்க முயன்றது அவர்களுக்கு தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரித்தபோது வங்காளதேசத்தில் இருந்து ஆவணங்கள் எதுமின்றி அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருந்தனர். மேலும் பிழைப்பு தேடி ரெயில் மூலமாக சென்னை வரவிருந்தநிலையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்காளதேசத்தை சேர்ந்த 23 பேரை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை