கொத்தவலசா,
ஆந்திர மாநிலம் கொத்தவலசா மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் காலையில் புளியோதரை சாப்பிட்ட 24 மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
மாணவிகள் விடுதி கேண்டீனில் அசுத்தமான காலை உணவை சாப்பிட்டுள்ளனர். இதனால் மாணவிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகளை விடுதி ஊழியர்கள் சிகிச்சைக்காக கொத்தவலசை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆறுக்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக சுருங்கவரப்பு சமூக சுகாதார மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, 14 மாணவர்கள் குணமடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் உடல்நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக விடுதி வார்டன் தெரிவித்துள்ளார்.