கோப்பு படம் (பிடிஐ) 
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் 2 மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து: டெல்லி கங்காராம் மருத்துவமனை

ஆக்சிஜன் 2 மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக டெல்லி கங்காராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பால் டெல்லி திணறி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவப்படுக்கைகள் தட்டுப்பாடு என்று டெல்லியின் சுகாதார கட்டமைப்பு தத்தளித்து வருகிறது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவது தொடர்பாக 'பிச்சை எடுங்கள், திருடுங்கள், ஆனால் மக்கள் உயிரைக் காத்திடுங்கள்' என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தே டெல்லியின் எதார்த்த சூழ்நிலையை வெளிக்காட்டி உள்ளது.

இந்த நிலையில், டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: ஆக்சிஜன் 2 மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெண்டிலேட்டர்ஸ், பிபப் கருவிகள் முழுமையாக செயல்படவில்லை. அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.