தேசிய செய்திகள்

எல்.ஐ.சி.யின் 25 சதவீத பங்குகள் விற்பனையா? - பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்

எல்.ஐ.சி.யின் 25 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ள தகவல் குறித்து பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

எல்.ஐ.சி. என்று அழைக்கப்படுகிற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த பத்திரிகை செய்தியை தனது டுவிட்டர் கணக்கில் இணைத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், அரசு நிறுவனங்களை விற்பதற்கு பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்துக்கு சுயமாக உருவாக்கப்பட்ட சரிவை ஈடுசெய்வதற்காக, நாட்டின் சொத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனை செய்யப்படுகின்றன. மக்களின் எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் பணயம் வைத்து எல்.ஐ.சி.யை விற்பனை செய்வது, மோடி அரசின் மற்றுமொரு வெட்கக்கேடான முயற்சி ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு