தேசிய செய்திகள்

தோழி குறித்து தவறாக பேசிய நண்பனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற இளைஞன் - அதிர்ச்சி சம்பவம்

, , ,

தினத்தந்தி

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரிஷப் மிஸ்ரா (வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது நண்பர் ஹர்ஷ் குப்தாவும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவருக்கும் இடையே பணப்பிரச்சினை நிலவி வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு ரிஷப் மிஸ்ரா, ஹர்ஷ் குப்தா மேலும் சிலர் மதுகுடித்துள்ளனர். அப்போது, ரிஷப் மிஸ்ராவின் தோழி குறித்து ஹர்ஷ் குப்தா தவறாகவும், அநாகரீகமாகவும் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்க்குவாதம் முற்றிய நிலையில் ரிஷப் மிஸ்ரா தனது நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் ஹர்ஷ் குப்தாவை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹர்ஷ் குப்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ஹர்ஷ் குப்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக ரிஷப் மிஸ்ரா உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா