தேசிய செய்திகள்

அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் இன்று 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் இது அமல்படுத்தப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த முடிவு குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து