தேசிய செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலி - மத்திய அரசு தகவல்

சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

இந்தூர்,

நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.களில் போதுமான பேராசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த காலிப்பணியிடங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சந்திரசேகர் என்ற ஆர்வலர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்து உள்ளது.

அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. உள்பட நாட்டின் முக்கியமான 8 ஐ.ஐ.டி. நிறுவனங்களில் மொத்தம் 65,824 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு 6,318 பேராசிரியர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 4,049 பேராசிரியர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இதன் மூலம் 36 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

இதில் அதிகபட்சமாக வாரணாசி ஐ.ஐ.டி.யில் 52 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. மேலும் கரக்பூர் (46), ரூர்க்கி (42), கான்பூர் (37), டெல்லி (29), சென்னை (28), மும்பை (27), கவுகாத்தி (25) போன்ற ஐ.ஐ.டி.கள் அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன. நாட்டின் பழமையான மற்றும் முக்கியமான ஐ.ஐ.டி.களில் இவ்வாறு அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து கல்வியாளர்கள் கவலை வெளியிட்டு இருக்கின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்