தேசிய செய்திகள்

புதுவையில் 288 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்

புதுவையில் 288 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பானது அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று 288 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

இதில் 11 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். தற்போது 65 பேர் உள்நோயாளிகளாக தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 571 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 7 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது 62 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 15 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 101 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 205 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 22 லட்சத்து 57 ஆயிரத்து 262 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை