தேசிய செய்திகள்

கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனா 2-வது அலை இன்னும் முடிவடையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரைசின் 2 -வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது. நாளொன்றுக்கு 4 லட்சத்தை தாண்டி அதிர வைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது 50 ஆயிரத்திற்கும் சற்று அதிகமாக காணப்படுகிறது.

கொரோனா 2-வது அலை பரவல் வேகம் குறைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், மராட்டியம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைய மறுத்து வருகிறது.

இதற்கிடையே, கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்னும் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. எனவே, தொற்று பரவல் அதிகரிக்கும் வகையிலான தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்