மதுரா,
உத்தர பிரதேசத்தின் மதுரா அருகே யமுனா அதிவிரைவு சாலையில் இன்று அதிகாலையில் நடந்த விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 டாக்டர்கள் பலியானார்கள்.
டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் வழியில் அவர்களது கார் ஒரு டிரக் மீது பயங்கரமாக மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. காயமடைந்தவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.