புலந்த்ஷெஹர்,
புலந்த்ஷெஹரின் சயானா கிராமத்தில் பசுவதையைக் கண்டித்து நடைபெற்ற கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர். இதன் மீதான வழக்குகள் 70 பேர் மீது பதிவாகி உள்ளன.
இந்த வன்முறை நடைபெற்று இரு வாரங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசுவதையில் ஈடுபட்டதாக மூன்று பேரும், கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளியாக நம்பப்படும் பஜ்ரங் தள் தலைவர் யோகேஷ் ராஜ், இன்னும் சுதந்திரமாக சுற்றி வருகிறார். தலைமறைவாக இருப்பதோடு அவ்வப்போது தான் குற்றமற்றவன் எனக்கூறி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.