தேசிய செய்திகள்

போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் அரபிக்கடலில் சென்ற 3 படகுகள் - கடலோர காவல்படை சுற்றிவளைத்தது

அரபிக்கடல் பகுதியில் 300 கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகளுடன் சென்ற 3 படகுகளை கடலோர காவல்படையினர் அதிரடியாக சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

புதுடெல்லி,

அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள லட்சத்தீவுக்கூட்டங்களின் மினிக்கோய் தீவு அருகே 3 படகுகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்ததை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனடியாக கடலோர காவல்படையின் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் அங்கு விரைந்து சென்றன. பின்னர் அந்த 3 படகுகளையும் சுற்றி வளைத்து அவற்றில் சோதனையிடப்பட்டது.

அப்போது அந்த படகுகளில் 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அந்த படகுகளை அருகில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு படகில் இருந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...