தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்- பொதுமக்கள் 3 பேர் பலி

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம், கெரான் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், பொதுமக்களை குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

கடந்த ஒரு வாரமாகவே எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்முவில் உள்ள மெந்த்ஹர், பாலகோட், மன்கோட் கெர்னி ஆகிய செக்டர்களில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானின் பதுங்கு குழிகள் சேதம் அடைந்ததாகவும் ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. நிகழாண்டில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை, எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு