தேசிய செய்திகள்

3 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு: ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

3 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராம்விலாஸ் பஸ்வான் தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கையால் நாட்டில் 3 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்துக்குள் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறைவேற்றப்படும். இதுவரை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் உள்பட 16 மாநிலங்களில் 3 கட்டங்களாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொலைதூர இடங்களில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சில தடங்கல்கள் உள்ளது. இந்த திட்டத்தில் 81 கோடி பயனாளிகள் உள்ளனர். தற்போது 610 லட்சம் டன் உணவு தானியங்கள் ரேஷனில் வழங்கப்படுகிறது. மத்திய அரசு மானியமாக ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகிறது என்று அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை