தேசிய செய்திகள்

தாஜ்மஹாலை பார்வையிட 3 நாள் இலவச அனுமதி - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தாஜ்மஹாலை பார்வையிட 3 நாள் இலவச அனுமதி வழங்கப்படுவதாக ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

ஆக்ரா,

ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹால் மொகலாய மன்னர் ஷாஜஹானால், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக 17-ம் நூற்றாண்டில் யமுனை ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்டதாகும். ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் 'உருஸ் விழா' நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஷாஜஹானின் 319-வது பிறந்தநாளையொட்டி வழக்கம்போல் இந்த ஆண்டும் அவரது சமாதியில் 3 நாட்கள் 'உருஸ் விழா' கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக வரும் ஏப்ரல் மாதம் 2, 3 தேதிகளில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும், 4-ந் தேதி நாள் முழுவதும் பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு