தேசிய செய்திகள்

3 நாள் பயணமாக அர்ஜென்டினா அதிபர் இந்தியா வருகை

3 நாள் பயணமாக அர்ஜென்டினா அதிபர் இந்தியா வந்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் அர்ஜென்டினா இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி இந்தியா வரும்படி அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமரின் அழைப்பை ஏற்றுக் கொண்ட மவுரிசியோ மக்ரி, 3 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார். அவர் தனது மனைவி மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகளுடன் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அவரை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவரதன் ரத்தோர் வரவேற்றார்.

இந்த பயணத்தின் போது மவுரிசியோ மக்ரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார். முன்னதாக மவுரிசியோ மக்ரிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்து அளிக்கிறார். அர்ஜென்டினா அதிபரின் வருகை இருநாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்