தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் மணற்குன்று சரிந்ததில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் மணற்குன்று சரிந்ததில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

நிவாரி,

மத்திய பிரதேச மாநிலத்தின் நிவாரி நகரில் காட்வாஹா கிராமத்தில் மணற்குன்று திடீரென சரிந்து விழுந்ததில் 3 பேர் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றி நிவாரி போலீஸ் சூப்பிரெண்டு அலோக் குமார் கூறும்பொழுது, மணற்குன்று அவர்கள் மீது சரிந்ததில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

எனினும் சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயிரிழந்து விட்டனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்துள்ளோம். உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை