தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பாஜக தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் பாஜக தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளம் மாநிலம் அசன்சோலில் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த பொதுக் கூட்டத்திற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மத அமைப்பு சார்பில் போர்வைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுவேந்து அதிகாரி கலந்து கொண்டார். இந்த நிலையில் மேடையை நெருங்க மக்கள் முண்டியடித்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இந்த கூட்டநெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை