தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு மேலும் 3 பேர் பரிந்துரை

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு மேலும் 3 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த வி.சுப்பிரமணியனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது.

இந்தநிலையில் கேரள ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி ஹரிகேஷ் ராய், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ள கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ள ரவீந்திர பாட் ஆகிய 3 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயரும்.