தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் போதை பொருள் கடத்திய 3 நபர்கள் கைது

ஜம்மு-காஷ்மீரில் மூட்டையில் மறைத்து வைத்து 40 கிலோ போதை பொருள் கடத்திய 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர், சம்பா மாவட்டத்தில் 40 கிலோ போதை பொருட்கள் கடத்திய 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பா மாவட்டத்தின் மன்சார் மோர் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த டிராக்டரில் 2 மூட்டைகளில் வைத்து சுமார் 40 கிலோ போதை பொருள் கடத்தப்படுவதை கண்டிப்பிடித்தனர்.

இதனையடுத்து, போதை பொருட்கள் கடத்திய அனில் குமார், தீப் குமார் மற்றும் ஹர்ஜீத் சிங் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 40 கிலோ போதைப்பொருள் மற்றும் போதை பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...