தேசிய செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் லோகர்தகா மாவட்டத்தில் உள்ள பகேகரா கிராமத்தில் பக்ரு பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அந்த பகுதியை இன்று மதியம் 2.45 மணிக்கு சி.ஆர்.பி.எப். படையின் 158வது மற்றும் 214வது பட்டாலியன் வீரர்கள் மற்றும் மாநில போலீசாரும் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இதில் நக்சலைட்டுகள் 3 பேர் பலியாகினர். அவர்கள் பயன்படுத்திய ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் சில வெடிபொருட்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

அங்கு மேலும் சில நக்சலைட்டுகள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால், தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்