ஜம்மு,
ஜம்மு மாவட்டத்தில் 500,2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். 44 ஆயிரம் மதிப்புடைய கள்ள நோட்டுக்களை 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக கள்ள நோட்டுக்கள் வைத்திருவந்தவர்களின் அடையாளம் மட்டும் தெரியவந்துள்ளது. கள்ள நோட்டுக்களை எங்கிருந்து கொண்டு வந்தனர்? என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. தொடர்ந்து மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.