ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ஷெல் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், இருவர் காயம் அடைந்தனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு சிறுமியும், ராணுவ வீரரும் காயம் அடைந்தனர். இந்திய ராணுவமும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை கொடுத்து உள்ளது.