தேசிய செய்திகள்

காஷ்மீர் பனிச்சரிவில் ராணுவ முகாம் சிக்கியது, 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் பனிச்சரிவு ராணுவ முகாமை தாக்கியதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #JammuAndKashmir #Avalanche

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

வடக்கு காஷ்மீரின் குபுவாரா மாவட்டம் மாசிலி செக்டாரில் ராணுவம் முகாம் பனிச்சரிவில் சிக்கியது. இந்த விபத்து சம்பவத்தில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்து உள்ளார்.

மாசிலி செக்டாரின் சோனா பாண்டி பகுதியில் மாலை 4:30 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையில் புதன் கிழமை 6.2 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து குபுவாரா உள்பட காஷ்மீர் பகுதியில் 24 மணி நேரங்களில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் குபுவாராவில் பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த மாதம் குபுவாராவில் பனிச்சரிவு ஏற்பட்டதில் வாகனம் ஒன்று சிக்கியதில் குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்