ஜம்மு,
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹாலன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் நடைபெற்ற சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதன்பிறகு, என்கவுண்ட்டரில் உயிரிழந்த ராணுவ வீரர்களிடம் இருந்து 4 ஏகே-47 துப்பாக்கிகளை பயங்கரவாதி ஒருவர் பறித்துச் சென்றார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.