ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் படமலோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டரில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.