தேசிய செய்திகள்

மும்பையில் கட்டுமான பணியின்போது விபத்து - 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மும்பையில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மும்பை,

மும்பையின் போரிவலி புறநகர் பகுதியில் 24 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் கட்டடத்தின் 16 வது மாடியில் அமைக்கப்பட்டு இருந்த சாரம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 கட்டட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களில் 3 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேசமயம் ஒரு தொழிலாளி மட்டும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு