புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்பேது பாரிவேந்தர் எம்.பி., தமிழகத்தில் இதுவரை எத்தனை தூரத்திற்கு அகல ரெயில்வே பாதைகளில் மின்மயமாக்கும் பணிகள் முழுமையாகவே, பாதியாகவே நடந்து முடிந்திருக்கின்றன என்றும், இந்த பணிகள் அனைத்தும் எப்பெழுது முழுமையாக முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், தமிழகத்தை பெறுத்தவரை கடந்த மார்ச் 1 ஆம் தேதி வரை மெத்தம் உள்ள 3 ஆயிரத்து 864 கிலே மீட்டர் தூர அகல ரயில் பாதைகளில் 3 ஆயிரத்து 64 கிலே மீட்டர் தூர பாதைகளில் மின்மயமாக்கும் பணிகள் முடிந்திருப்பதாகவும், எஞ்சிய ரயில் பாதைகளில் ஒவ்வெரு கட்டமாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.