தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 31 ஆயிரம் பக்தர்கள் வருகை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியை தாண்டியது.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டும் ஒரு நாளைக்கு 2 ஆயிரம்பேர் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது வெளி மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஏழுமலையான் கோவிலில் 31,558 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்களில் 14,247 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார்கள். நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 77 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது