தேசிய செய்திகள்

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 32 கோடி: மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் 32 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையை விட 2வது அலையில், தீவிர பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். இந்நிலையில், இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடெங்கும் புதிதாக 48 ஆயிரத்து 698 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது. 5,95,565 பேர் சிகிச்சையில் உள்ளனர். 64,818 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நாடு முழுவதும் 2,91,93,085 ஆக உள்ளது.

சமீப வாரங்களாக கொரோனா பாதிப்பு நாட்டில் குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்களும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் இதுவரை 32 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...