புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.33 ஆயிரத்து 822 கோடி செலவில், நாட்டின் தொலைதூரப்பகுதிகளில் 32 ஆயிரத்து 152 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், ஆந்திரா, சத்தீஷ்கார், ஜார்கண்ட், மராட்டியம், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் 7,287 கிராமங்களில் 4-ஜி அலைவரிசை அடிப்படையில் செல்போன் சேவை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த திட்டம், ரூ.6,466 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. இந்த தகவல்களை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குதர் நிருபர்களிடம் தெரிவித்தார்.