தேசிய செய்திகள்

சிகிச்சையில் திருப்தி இல்லை எனக் கூறியவரை அடித்து கொன்ற மருத்துவமனை ஊழியர்கள் மனைவி புகார்

டெல்லியில் சிகிச்சையில் திருப்தி இல்லை எனப் புகார் கூறிய கணவரை மருத்துவமனை ஊழியர்கள் அடித்து கொன்றதாக மனைவி புகார் அளித்துள்ளார். #Tamilnews

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ராவ் துலா ராம் மருத்துவமனைக்கு சோனு வயது 32 என்ற நபர் தனது மனைவியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக வந்து இருந்தார். இந்தநிலையில் மருத்துவமனை ஊழியர்களால் அவர் அடித்துகொல்லப்பட்டார் என்று சோனுவின் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை மீது சோனுவின் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை போஸ்மார்டம் செய்த பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்மருத்துவமனையின் மேலாளர் கூறுகையில்,

சோனுவை மருத்துவமனை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுவது குறித்து நாங்கள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் எந்தவிதமான தாக்குதல்கள் இல்லை.

சோனு கடந்த 11-ம் தேதி முதலில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவரது மனைவியை அழைத்து வந்தனர். இருவரும் விஷத்தை உட்கொண்டுள்ளனர். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டனர். 12-ம் தேதி 2 மணி அளவில் சோனுவிற்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறி அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை நாங்கள் மீடியா மூலம் தெரிந்துகொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை